skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு
  • கிங்Dom of கீழக்கரை

சமையல் குறிப்பு

காய்கறி மக்காச் சோள சூப்

|


காய்கறி மக்காச் சோள சூப்

காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தையாகட்டும், நோயிலிருந்து மீண்ட சத்து குறைபாடுள்ள முதியவராகட்டும், அலைச்சலால் சோர்ந்து விடும் குடும்பத்தலைவராகட்டும், ஓயாத உடல் உழைப்பால் சத்து இழக்கும் இல்லத்தரசியாகட்டும், அனைவருக்கும் தேவை இயற்கை காய்கறிகளில் உள்ள வைட்டமின்களும், தாதுப்பொருட்களும். இதை உங்களுக்கு எளிதாகத் தரவல்லது, காய்கறி மக்காச்சோள சூப். 

தேவையானவை: 

பெரிய வெங்காயம் - 1 
பூண்டு - 4 பல் 
காரட் - 2 
நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப் 
துருவிய கோஸ் - 1/2 கப் 
பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன் 
மக்காச்சோள முத்துக்கள் - 1/2 கப் 
ஜவ்வரிசி மாவு - 1 டீஸ்பூன் 
உப்பு - 1/2 டீஸ்பூன் 
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் 
எண்ணெய் - 1 ஸ்பூன் 

செய்முறை: 

* வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும், சிறிதாக வெட்டி அதை சிறிது எண்ணெயில் வதக்கி, நைசாக அரைத்துக் கொள்ளவும். 

• காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

* பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன், மக்காச்சோளம், வெங்காய விழுது சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆனால் குழைய விடக்கூடாது. 

* ஜவ்வரிசி மாவை 2 கப் தண்ணீரில் கலந்து கொழகொழவென கண்ணாடி பதத்திற்கு வரும்வரை கஞ்சியாக காய்ச்சவும். 

* அதனுடன் காய்கறிகள், அரைத்த மசாலா, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். 

* சூப் சற்று திக்காக இருக்க வேண்டுமானால், 1 டீஸ்பூன் மக்காச் சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதை சூப்புடன் கலந்து கொதிக்க விடவும். 

* சுவையான காய்கறி மக்காச்சோள சூப் தயார்.

0 comments

கேரட் தயிர் பச்சடி

|


கேரட் தயிர் பச்சடி

தேவையான பொருட்கள்...
 
கேரட் - 2
தயிர் - 2 கப் பச்சை
மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 1 ஸ்பூன் (விருப்பப்பட்டால் சேர்க்கவும்)
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை....
 
• கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.
 
• வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
•  வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும்.
 
• பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து வதக்கி,  பின் அதனுடன் கேரட் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிளரவும்.(கேரட் நன்கு வேக கூடாது)
 
•  அதனுடன் உப்பு, தேங்காய்ப்பூ சேர்த்து கலக்கவும்.
 
• பின்னர் இந்த கலவையை தயிரில் கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.

0 comments

டயட் தோசை

|


டயட் தோசை

தேவையான பொருட்கள்: 

கொள்ளு - கால் கப் 
பார்லி - கால் கப் 
வெள்ளை சென்னா - கால் கப் 
புழுங்கல் அரிசி - கால் கப் 
வால் நட் - கால் கப் 
ராகி மாவு - ஒரு ஸ்பூன் 
இஞ்சி - ஒரு சிறிய துண்டு 
பூண்டு -  3  ப‌ல் 
ப‌ச்சை மிள‌காய் - ஒன்று 
கொத்தம‌ல்லி - சிறிதளவு  (பொடியாக‌ நறுக்கியது) 
புதினா - சிறிதளவு  (பொடியாக‌ நறுக்கியது) 
க‌றிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக‌ நறுக்கியது) 
சின்ன‌ வெங்காய‌ம் ‍ -  50 கி  (பொடியாக‌ நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
ஆலிவ் ஆயில் - 3  ஸ்பூன் 

செய்முறை: 

* கொள்ளு, வெள்ளை சென்னா, அரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும் 

*  பார்லி அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊற வைக்கவும். 

* வால் ந‌ட்டை ஒரு ம‌ணி நேர‌ம் முன் கொதிக்கும் வெந்நீரில் ஊற‌வைத்து தோல் உரித்து வைத்து கொள்ளவும். 

* அரைக்கும் போது பூண்டு, இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ள‌வும். 

* முதலில் அரிசியை போட்டு ந‌ன்கு அரைத்து கொண்டு மீதி உள்ள‌ அனைத்து பொருட்க‌ளையும் முக்கால் ப‌த‌த்திற்கு அரைக்கவும். 

* அரைத்த‌ க‌ல‌வையில் வெங்காய‌ம், கொத்தம‌ல்லி, புதினா க‌றிவேப்பிலையை பொடியாக அரிந்து சேர்க்க‌வும். 

* அரைத்த‌ க‌ல‌வை கெட்டியாக இருக்க‌ வேண்டும். 

*  தோசை கல்லில் தோசைக‌ளாக‌ ஊற்றி ஓரங்களில் கொஞ்ச‌ம் ஆலிவ் ஆயில் தெளித்து சுட்டெடுக்க‌வும். 

* இந்த டயட் தோசை மிகவும் சத்தான உணவாகும்.

0 comments

மிளகு கொள்ளு சூப்

|


மிளகு கொள்ளு சூப்

தேவையான பொருட்கள்  : 

கொள்ளு - அரை கப் 
தக்காளி - 3 
எலுமிச்சம்பழச் சாறு - அரை டேபிள்ஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு   
உப்பு - சுவைக்கேற்ப 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 

பொடிக்க: 

மிளகு - ஒரு டீஸ்பூன் 
சீரகம் - ஒரு டீஸ்பூன் 
பூண்டு - 2 பல் 
கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை: 

* கொள்ளை முதல் நாள் இரவே ஊறப் போடுங்கள். மறுநாள் 3 கப் தண்ணீரை சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளுங்கள். 

* மிளகு, சீரகத்தை நன்கு மைய அரைத்து பூண்டு, கறிவேப்பிலை சேர்த்துத் தட்டியெடுங்கள். எண்ணெய்  காயவைத்து, பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேருங்கள். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்த விழுது சேர்த்து இன்னும் 3 நிமிடம் வதக்குங்கள். 

* கொள்ளு வேகவைத்த தண்ணீரையும், தேவையான உப்பையும் சேர்த்து, 
5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறுங்கள்.

0 comments

வெள்ளரிக்காய் வாழைப்பூ பச்சடி

|


வெள்ளரிக்காய் வாழைப்பூ பச்சடி

தேவையானவை: 

பொடியாக நறுக்கிய வாழைப்பூ - 1 கப் 
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - அரை கப் 
தயிர் - ஒரு கப் 
சின்ன வெங்காயம் - 5 
மல்லித்தழை - சிறிது 
கடுகு - அரை டீஸ்பூன் 
பெருங்காயத்தூள் - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு. 

செய்முறை: 

* வெங்காயம், மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். 

* வாழைப்பூவையும் வெள்ளரிக்காயையும் கலந்துகொள்ளவும். 

* சிறிதளவு எண்ணெயில், கடுகு, பெருங்காயம் தாளித்து வெள்ளரிக்காய் கலவையில் கொட்டிக் கலக்கவும். சாப்பிடுவதற்கு முன்பு, கலவையில் தயிர், உப்பு, மல்லித்தழை, வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். 

(குறிப்பு: இதற்கான தயிர் உறைய வைக்கும்போது, பாலை தண்ணீரில்லாமல் கெட்டியாகக் காய்ச்சி, துளி மோர் விட்டு உறைய வைக்கவேண்டும். அந்தத் தயிர்தான், பச்சடிக்கு நன்றாக இருக்கும்.)

0 comments

பார்லி காய்கறி சூப்

|


பார்லி காய்கறி சூப்

தேவையான பொருட்கள்.....
 
பார்லி - ஒரு கைப்பிடி
காய்கறிகள் (காலிஃப்ளவர், முட்டைகோஸ், பீன்ஸ், அவரை, பட்டாணி) - ஒரு கப் பொடியாக அரிந்தது
உப்பு - சிறிது
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்
வெங்காயம் - பாதி
 
செய்முறை....  
 
* வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
 
* பார்லியை நன்கு ஊறவைத்து அதில் காய்கறிகளை பொடியாக அரிந்து சேர்த்து உப்பு போட்டு மூன்று இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
 
* வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டவும்.
 
* ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயத்தை   சேர்த்து வதக்கி அதில் வடித்து வைத்த தண்ணீரை சேர்த்து மிளகு தூள் தூவி கொதிக்க விடவும்.
 
* கடைசியாக சோளமாவு கரைத்து ஊற்றி விடவும். சூப் கட்டியானதும் சூடாக பவுளில் ஊற்றி குடிக்கவும்.

0 comments

முள்ளங்கி ரைஸ்

|


முள்ளங்கி ரைஸ்

தேவையான பொருட்கள் :
 
சாதம் - ஒரு கப்
முள்ளங்கித் துருவல் -  ஒரு கப்
பச்சை மிளகாய் -  3 
வெங்காயம் - 1    
தக்காளி - 1 
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் 
சோம்பு - கால் டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
பிரிஞ்சி இலை (சிறியது) - ஒன்று
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் -  ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.    
 
செய்முறை:
 
* வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
 
* பச்சை மிளகாய், பட்டை, சோம்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
 
* காடாயில் எண்ணெயை விட்டு சூடாக்கி, பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம், தக்காளியை வதக்கவும்.
 
* பின்  இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
 
* இதனுடன் துருவிய முள்ளங்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கவும்.
 
* கடைசியாக  சாதத்தை சேர்த்து நன்கு கிளறி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி தூவி அலங்கரித்தால்... முள்ளங்கி ரைஸ் ரெடி!

0 comments
« Newer Posts Older Posts »
Blogger Widget
Scroll to top widget @Netoops Blog.blogspot.com

Popular Posts

  • சமையல்களில் பெரும் பங்காற்றும் - தக்காளி ரசம் ! - செய்முறை.
    தென்னிந்திய சமையல்களில் பெரும் பங்கு வைப்பது ரசம். ரசம் ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசம்  செய்யும்போது ரச பொடியை புதிதாக தயாரித்தா...
  • சுவையான சத்தான ஆட்டுக்கால் சூப்! - செய்முறை.
    சுவையான, சத்தான ஆட்டுக்கால் சூப் செய்வதற்கான எளிதான செய்முறை. தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 1 செட் (4 கால்) மிளகு - 2- 3 தேக...
  • ஹைதராபாத் சிக்கன் பிரியாணி! - செய்முறை!
    ஹைதராபாத் சிக்கன் பிரியாணி என்பது சிக்கன் மற்றும் பாஸ்மதி அரிசி சேர்த்து குறைந்த சூட்டில் தம் போடுவதாகும். எளிய முறையில் ஹைதராபாத் ச...
  • தக்காளி குருமா செய்வோமா?
    சுவையான தக்காளி குருமா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு திருமதி. ரேவதி சண்முகம் அவர்களின் செய்முறை குறிப்பை த...
  • தித்திக்கும் கேரட் அல்வா!
    காய்கறிகளின் ராணி என்று அழைக்கப்படும் அளவிற்கு பெருமை கொண்டது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும...
  • முட்டை கொத்து பரோட்டா!
    முட்டை கொத்து பரோட்டா! சுவையான முட்டை கொத்து பரோட்டா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. தேவையான பொருட்கள் பரோட்டா – 5 ம...
  • போண்டா செய்வது எப்படி?
    மைதா போண்டா செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு. தேவையான பொருட்கள் மைதா மாவு – 1  கப் இட்லி மாவு – 1 /2 கப் பெரிய வெங்காயம்...
  • கேரளா மீன் குழம்பு
    சுவையான கேரளா மீன் குழம்பு / மீன் கூட்டான் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. தேவையான பொருட்கள் சின்ன மீன் – 1/2 கிலோ (தலை,...
  • மசாலா தோசை - செய்முறை விளக்கம்.
    சுவையான மசாலா தோசை செய்வதற்கான சமையல் குறிப்பு.   தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 1 /2 கப் பச்சை அரிசி – 1 /2 கப் உளுத்தம்ப...
  • புளிப்பு மாதுளை சாதம்
    தேவையான பொருட்கள்.....   உதிரியாக வடித்த பச்சரிசி சாதம்  - 1 கப் புளிப்பு மாதுளம் பழம் - 2 பழம் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு ...

Followers

Follow Me On TwitterFind Us On FacebookSubscribe to my feed நண்பருக்கு அறிமுகம் செய்ய

Blog Archive

  • Sept 2012 (1)
  • Apr 2012 (1)
  • Mar 2012 (2)
  • Feb 2012 (44)
இமெயில் மூலம் பெருக

Enter your email address:

Scroll to top widget @Netoops Blog.blogspot.com
Copyright © 2012.சமையல் குறிப்பு - All Rights Reserved.