தென்னிந்திய சமையல்களில் பெரும் பங்கு வைப்பது ரசம். ரசம் ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசம் செய்யும்போது ரச பொடியை புதிதாக தயாரித்தால் ரசத்தின் சுவை கூடும். மிக அதிக நேரம் ரசத்தை கொதிக்க வைக்கக் கூடாது.எளிய முறையில் தக்காளி ரசம் செய்வதற்கான சமையல் குறிப்பு.
தேவையான பொருட்கள்
தக்காளி நடுத்தரமானது – 2
புளி விழுது – 1 தேக்கரண்டி
மல்லிதழை – சிறிது
தண்ணீர் – 4 – 5 கப்
ரச பொடிக்கு
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 4 -5 பல் ( தோலை நீக்க வேண்டாம்)
தாளிக்க
வர மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிது
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது
செய்முறை
தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கி, புளியுடன் சேர்த்து மசித்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பை புளித்தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
முன்பே தயாரித்து வைத்திருக்கும் ரச பொடியை உபயோகப்படுத்த வேண்டாம். புதியதாக தயாரித்தால்தான் சுவை அதிகம்.
ரச பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றிரண்டாக அடித்துக் கொள்ளவும். தூள் செய்ய வேண்டாம்.
கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம் , இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள ரச பொடியை சேர்த்து கொதிக்க விடவும்.
நிறைய நேரம் ரசத்தை கொதிக்க வைக்க வேண்டியதில்லை. அடுப்பை அணைத்த பிறகு, மல்லிதழை தூவி, பரிமாறும் பாத்திரத்திற்கு உடனே மாற்றி விடவும்.
கடாயிலேயே வைத்திருந்தால் ரசம் அதனுடைய சுவையை இழந்து விடும்.
|