தேவையான பொருட்கள்...
கேரட் - 2
தயிர் - 2 கப் பச்சை
மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 1 ஸ்பூன் (விருப்பப்பட்டால் சேர்க்கவும்)
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை....
• கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.
• வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும்.
• பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து வதக்கி, பின் அதனுடன் கேரட் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிளரவும்.(கேரட் நன்கு வேக கூடாது)
• அதனுடன் உப்பு, தேங்காய்ப்பூ சேர்த்து கலக்கவும்.
• பின்னர் இந்த கலவையை தயிரில் கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.