தேவையான பொருட்கள் :
கொள்ளு - அரை கப்
தக்காளி - 3
எலுமிச்சம்பழச் சாறு - அரை டேபிள்ஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பொடிக்க:
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* கொள்ளை முதல் நாள் இரவே ஊறப் போடுங்கள். மறுநாள் 3 கப் தண்ணீரை சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
* மிளகு, சீரகத்தை நன்கு மைய அரைத்து பூண்டு, கறிவேப்பிலை சேர்த்துத் தட்டியெடுங்கள். எண்ணெய் காயவைத்து, பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேருங்கள். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்த விழுது சேர்த்து இன்னும் 3 நிமிடம் வதக்குங்கள்.
* கொள்ளு வேகவைத்த தண்ணீரையும், தேவையான உப்பையும் சேர்த்து,
5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறுங்கள்.