skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு
  • கிங்Dom of கீழக்கரை

சமையல் குறிப்பு

மசால் மெது வடை - செய்முறைக்குறிப்பு.

|






தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு - 1 கப்
  • சின்ன வெங்காயம் - 1 /2கப்
  • கருவேப்பிலை - சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  • புதினா - சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  • கொத்தமல்லி தழை - சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  • உப்பு - வைக்கேற்ப
  • எண்ணெய் - பொரிப்பதற்கு
  • அரைக்க
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு - 2 பல்
  • பச்சை மிளகாய் - 1
  • காய்ந்த மிளகாய் - 1
  • சோம்பு - 1 / 2 தேக்கரண்டி
  • பட்டை - 2
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 2

செய்முறை :

  1. பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, ஒரு மேசைக்கரண்டி பருப்பை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள பருப்பை கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
  3. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனியாக கரகரப்பாக அரைத்து, அரைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்க்கவும்.
  4. இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை, தனியாக எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  5. கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
  6. கைகளால் சிறு சிறு வடையாகத் தட்டி காயும் எண்ணையில் போட்டு, மிதமான சூட்டில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.

 குறிப்பு

  1. அரைத்து வைத்துள்ள பருப்புடன் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்தால் வடை மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும்.
  2. வடை செய்வதற்கென தனியாக பருப்பு கிடைக்கும்.அதை வடை செய்வதற்கு பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

0 comments

இளநீர் ஜூஸ்

|


இளநீர் ஜூஸ்

தேவையானவை......
 
இளநீர் - 2 கப்
தேங்காய் வழுக்கை - கால் கப்
பைனாப்பிள் (அ) ஆரஞ்சு துண்டுகள் - ஒரு கப்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
 
செய்முறை.......
 
•  இளநீர், தேங்காய் வழுக்கையை மிக்ஸியில் அரைத்து, அதனுடன்  எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். பைனாப்பிள் (அ) ஆரஞ்சு துண்டுகள், ஐஸ் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
 
• இது வெயிலுக்கு நல்லது.
 
• ஆனால், அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து உள்ளதால் தினமும் அருந்தக் கூடாது.

0 comments

லோ கலோரி சாலட்

|


லோ கலோரி சாலட்

தேவையானவை: 
 
நறுக்கிய கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் - தலா 1/2 கப்  
இஞ்சித் துண்டுகள் -  1/2  ஸ்பூன்
பச்சை மிளகாய் துண்டுகள்  -  1/2  ஸ்பூன்
சோயா சாஸ் - 1/2  ஸ்பூன்  
எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.  
 
செய்முறை:
 
•  காய்கறிகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும்.
 
• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறி துண்டுகள், சோயா சாஸ், எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் போட்டு கலந்து பரிமாறவும்.

0 comments

ஆரோக்கிய ஜூஸ்

|


ஆரோக்கிய ஜூஸ்

தேவையான பொருட்கள்....
 
புதினா - கைப்பிடி அளவு,
துளசி - கைப்பிடி அளவு,
கற்பூரவள்ளி இலை -கைப்பிடி அளவு,
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
சுக்குப் பொடி - கால் டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
சர்க்கரை- 200 கிராம்,
தண்ணீர் - 100 மில்லி
எலுமிச்சம் பழம் -கால் பழம்.
 
செய்முறை....
 
* புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, மூன்றையும் நன்றாக கழுவி  மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
• அதோடு மிளகுத்தூள், சுக்குப்பொடி, உப்பு கலந்து கொள்ளவும்.
 
• சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சம் பழத்தைக் கலந்து சூடேற்றி ஆறிய பிறகு, தனியாக வைத்திருந்த அனைத்தையும் ஒன்று சேர்த்தால் ஆரோக்கி ஜூஸ் ரெடி.
 
• அரை க்ளாஸ் மெடிக்கல் ஜூஸோடு பெரியவர்களுக்கு சோடாவை ஊற்றிக் கொடுக்கலாம்.
 
• குழந்தைகள் என்றால் தண்ணீரைக் கலந்து கொடுப்பதுதான் நல்லது.

0 comments

தக்காளி குருமா செய்வோமா?

|



சுவையான தக்காளி குருமா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு திருமதி. ரேவதி சண்முகம் அவர்களின் செய்முறை குறிப்பை தழுவியது.

தேவையான பொருட்கள்
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 4 – 6
  • மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
  • தேங்காய்த் துருவல் – 1 /2 கப்
  • கசகசா – 1/2 மேசைக்கரண்டி
  • பொட்டுக்கடலை – 1 தேக்கரண்டி
  • உப்பு – தேவைக்கு
  • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • அரைக்க
  • இஞ்சி – ஒரு துண்டு
  • பூண்டு – 2 பல்
  • பச்சை மிளகாய் – 3
  • பட்டை, லவங்கம் – தலா 1
  • சோம்பு – 1/4 தேக்கரண்டி
  • மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசா ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
தக்காளி குருமா இட்லி, தோசை ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

0 comments

சுவையான சத்தான ஆட்டுக்கால் சூப்! - செய்முறை.

|



சுவையான, சத்தான ஆட்டுக்கால் சூப் செய்வதற்கான எளிதான செய்முறை.


தேவையான பொருட்கள்
  • ஆட்டுக்கால் - 1 செட் (4 கால்)
  • மிளகு - 2- 3 தேக்கரண்டி
  • வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
  • சீரகம் - 2 தேக்கரண்டி
  • பூண்டு - 6 பல்
  • மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 1 (விரும்பினால்)
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • மல்லி இலை – சிறிது
  • கருவேப்பிலை – 2 இணுக்கு
செய்முறை
கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும்.
ஐந்து வெங்காயம் மட்டும் வெட்டி வைக்கவும்.மீதியை அரைக்க முழுதாக வைக்கவும்.
மிளகு, சீரகம், வரகொத்தமல்லி ஆகியவற்றை  லேசாக வதக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் மூன்றையும் போட்டு , வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
குக்கரில் ஒரு லிட்டர் அளவுக்கு (கால் மூழ்கும் அளவுக்கு சிறிது கூட) தண்ணீர் வைத்து உப்பு போடாமல், அரைத்த மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
இரண்டு விசில் வந்தவுடன் அரைமணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியவுடன் திறக்கவும். உப்பு சேர்க்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டி வைத்துள்ள வெங்காயம், கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
கொஞ்சம் திக்காக வேண்டும் என்றால் 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றலாம் அல்லது கார்ன் மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான, சத்தான ஆட்டுக்கால் சூப் ரெடி.
--- Kingdom of கீழக்கரை ---

0 comments

சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்

|


சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்

தேவையான பொருட்கள்.....
 
விதை நீக்கிய சீதாப்பழம் - 100 கிராம்,
சுகர் - 200 கிராம்,
தண்ணீர் - 100 மி.லி.
எலுமிச்சம்பழச்சாறு  -  2 அல்லது 3 துளிகள்,
பால் - தேவையான அளவு,
 
செய்முறை...
 
* விதை நீக்கிய சீதாப்பழத்தை மிக்ஸியில் அரைத்து கூழாக்கி பால், தண்ணீர், எலுமிச்சம் பழம், சுகர், எல்லாத்தையும் கலந்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
* தேவையான போதெல்லாம் அப்படியே எடுத்துக் குடிக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கெடாமல் இருக்கும். இதை காலை நேரங்களில் குடிப்பது தான் சரியானது!

0 comments
« Newer Posts Older Posts »
Blogger Widget
Scroll to top widget @Netoops Blog.blogspot.com

Popular Posts

  • சமையல்களில் பெரும் பங்காற்றும் - தக்காளி ரசம் ! - செய்முறை.
    தென்னிந்திய சமையல்களில் பெரும் பங்கு வைப்பது ரசம். ரசம் ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசம்  செய்யும்போது ரச பொடியை புதிதாக தயாரித்தா...
  • சுவையான சத்தான ஆட்டுக்கால் சூப்! - செய்முறை.
    சுவையான, சத்தான ஆட்டுக்கால் சூப் செய்வதற்கான எளிதான செய்முறை. தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 1 செட் (4 கால்) மிளகு - 2- 3 தேக...
  • ஹைதராபாத் சிக்கன் பிரியாணி! - செய்முறை!
    ஹைதராபாத் சிக்கன் பிரியாணி என்பது சிக்கன் மற்றும் பாஸ்மதி அரிசி சேர்த்து குறைந்த சூட்டில் தம் போடுவதாகும். எளிய முறையில் ஹைதராபாத் ச...
  • தக்காளி குருமா செய்வோமா?
    சுவையான தக்காளி குருமா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு திருமதி. ரேவதி சண்முகம் அவர்களின் செய்முறை குறிப்பை த...
  • தித்திக்கும் கேரட் அல்வா!
    காய்கறிகளின் ராணி என்று அழைக்கப்படும் அளவிற்கு பெருமை கொண்டது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும...
  • முட்டை கொத்து பரோட்டா!
    முட்டை கொத்து பரோட்டா! சுவையான முட்டை கொத்து பரோட்டா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. தேவையான பொருட்கள் பரோட்டா – 5 ம...
  • போண்டா செய்வது எப்படி?
    மைதா போண்டா செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு. தேவையான பொருட்கள் மைதா மாவு – 1  கப் இட்லி மாவு – 1 /2 கப் பெரிய வெங்காயம்...
  • கேரளா மீன் குழம்பு
    சுவையான கேரளா மீன் குழம்பு / மீன் கூட்டான் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. தேவையான பொருட்கள் சின்ன மீன் – 1/2 கிலோ (தலை,...
  • மசாலா தோசை - செய்முறை விளக்கம்.
    சுவையான மசாலா தோசை செய்வதற்கான சமையல் குறிப்பு.   தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 1 /2 கப் பச்சை அரிசி – 1 /2 கப் உளுத்தம்ப...
  • புளிப்பு மாதுளை சாதம்
    தேவையான பொருட்கள்.....   உதிரியாக வடித்த பச்சரிசி சாதம்  - 1 கப் புளிப்பு மாதுளம் பழம் - 2 பழம் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு ...

Followers

Follow Me On TwitterFind Us On FacebookSubscribe to my feed நண்பருக்கு அறிமுகம் செய்ய

Blog Archive

  • Sept 2012 (1)
  • Apr 2012 (1)
  • Mar 2012 (2)
  • Feb 2012 (44)
இமெயில் மூலம் பெருக

Enter your email address:

Scroll to top widget @Netoops Blog.blogspot.com
Copyright © 2012.சமையல் குறிப்பு - All Rights Reserved.