தேவையான பொருட்கள்....
புதினா - கைப்பிடி அளவு,
துளசி - கைப்பிடி அளவு,
கற்பூரவள்ளி இலை -கைப்பிடி அளவு,
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
சுக்குப் பொடி - கால் டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
சர்க்கரை- 200 கிராம்,
தண்ணீர் - 100 மில்லி
எலுமிச்சம் பழம் -கால் பழம்.
செய்முறை....
* புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, மூன்றையும் நன்றாக கழுவி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
• அதோடு மிளகுத்தூள், சுக்குப்பொடி, உப்பு கலந்து கொள்ளவும்.
• சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சம் பழத்தைக் கலந்து சூடேற்றி ஆறிய பிறகு, தனியாக வைத்திருந்த அனைத்தையும் ஒன்று சேர்த்தால் ஆரோக்கி ஜூஸ் ரெடி.
• அரை க்ளாஸ் மெடிக்கல் ஜூஸோடு பெரியவர்களுக்கு சோடாவை ஊற்றிக் கொடுக்கலாம்.
• குழந்தைகள் என்றால் தண்ணீரைக் கலந்து கொடுப்பதுதான் நல்லது.