தேவையானவை:
நறுக்கிய கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் - தலா 1/2 கப்
இஞ்சித் துண்டுகள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் துண்டுகள் - 1/2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• காய்கறிகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறி துண்டுகள், சோயா சாஸ், எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் போட்டு கலந்து பரிமாறவும்.