தேவையானவை......
இளநீர் - 2 கப்
தேங்காய் வழுக்கை - கால் கப்
பைனாப்பிள் (அ) ஆரஞ்சு துண்டுகள் - ஒரு கப்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
செய்முறை.......
• இளநீர், தேங்காய் வழுக்கையை மிக்ஸியில் அரைத்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். பைனாப்பிள் (அ) ஆரஞ்சு துண்டுகள், ஐஸ் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
• இது வெயிலுக்கு நல்லது.
• ஆனால், அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து உள்ளதால் தினமும் அருந்தக் கூடாது.