skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு
  • கிங்Dom of கீழக்கரை

சமையல் குறிப்பு

லோ கலோரி சாலட்

|


லோ கலோரி சாலட்

தேவையானவை: 
 
நறுக்கிய கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் - தலா 1/2 கப்  
இஞ்சித் துண்டுகள் -  1/2  ஸ்பூன்
பச்சை மிளகாய் துண்டுகள்  -  1/2  ஸ்பூன்
சோயா சாஸ் - 1/2  ஸ்பூன்  
எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.  
 
செய்முறை:
 
•  காய்கறிகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும்.
 
• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறி துண்டுகள், சோயா சாஸ், எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் போட்டு கலந்து பரிமாறவும்.

0 comments

ஆரோக்கிய ஜூஸ்

|


ஆரோக்கிய ஜூஸ்

தேவையான பொருட்கள்....
 
புதினா - கைப்பிடி அளவு,
துளசி - கைப்பிடி அளவு,
கற்பூரவள்ளி இலை -கைப்பிடி அளவு,
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
சுக்குப் பொடி - கால் டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
சர்க்கரை- 200 கிராம்,
தண்ணீர் - 100 மில்லி
எலுமிச்சம் பழம் -கால் பழம்.
 
செய்முறை....
 
* புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, மூன்றையும் நன்றாக கழுவி  மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
• அதோடு மிளகுத்தூள், சுக்குப்பொடி, உப்பு கலந்து கொள்ளவும்.
 
• சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சம் பழத்தைக் கலந்து சூடேற்றி ஆறிய பிறகு, தனியாக வைத்திருந்த அனைத்தையும் ஒன்று சேர்த்தால் ஆரோக்கி ஜூஸ் ரெடி.
 
• அரை க்ளாஸ் மெடிக்கல் ஜூஸோடு பெரியவர்களுக்கு சோடாவை ஊற்றிக் கொடுக்கலாம்.
 
• குழந்தைகள் என்றால் தண்ணீரைக் கலந்து கொடுப்பதுதான் நல்லது.

0 comments

தக்காளி குருமா செய்வோமா?

|



சுவையான தக்காளி குருமா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு திருமதி. ரேவதி சண்முகம் அவர்களின் செய்முறை குறிப்பை தழுவியது.

தேவையான பொருட்கள்
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 4 – 6
  • மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
  • தேங்காய்த் துருவல் – 1 /2 கப்
  • கசகசா – 1/2 மேசைக்கரண்டி
  • பொட்டுக்கடலை – 1 தேக்கரண்டி
  • உப்பு – தேவைக்கு
  • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • அரைக்க
  • இஞ்சி – ஒரு துண்டு
  • பூண்டு – 2 பல்
  • பச்சை மிளகாய் – 3
  • பட்டை, லவங்கம் – தலா 1
  • சோம்பு – 1/4 தேக்கரண்டி
  • மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசா ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
தக்காளி குருமா இட்லி, தோசை ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

0 comments

சுவையான சத்தான ஆட்டுக்கால் சூப்! - செய்முறை.

|



சுவையான, சத்தான ஆட்டுக்கால் சூப் செய்வதற்கான எளிதான செய்முறை.


தேவையான பொருட்கள்
  • ஆட்டுக்கால் - 1 செட் (4 கால்)
  • மிளகு - 2- 3 தேக்கரண்டி
  • வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
  • சீரகம் - 2 தேக்கரண்டி
  • பூண்டு - 6 பல்
  • மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 1 (விரும்பினால்)
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • மல்லி இலை – சிறிது
  • கருவேப்பிலை – 2 இணுக்கு
செய்முறை
கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும்.
ஐந்து வெங்காயம் மட்டும் வெட்டி வைக்கவும்.மீதியை அரைக்க முழுதாக வைக்கவும்.
மிளகு, சீரகம், வரகொத்தமல்லி ஆகியவற்றை  லேசாக வதக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் மூன்றையும் போட்டு , வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
குக்கரில் ஒரு லிட்டர் அளவுக்கு (கால் மூழ்கும் அளவுக்கு சிறிது கூட) தண்ணீர் வைத்து உப்பு போடாமல், அரைத்த மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
இரண்டு விசில் வந்தவுடன் அரைமணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியவுடன் திறக்கவும். உப்பு சேர்க்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டி வைத்துள்ள வெங்காயம், கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
கொஞ்சம் திக்காக வேண்டும் என்றால் 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றலாம் அல்லது கார்ன் மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான, சத்தான ஆட்டுக்கால் சூப் ரெடி.
--- Kingdom of கீழக்கரை ---

0 comments

சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்

|


சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்

தேவையான பொருட்கள்.....
 
விதை நீக்கிய சீதாப்பழம் - 100 கிராம்,
சுகர் - 200 கிராம்,
தண்ணீர் - 100 மி.லி.
எலுமிச்சம்பழச்சாறு  -  2 அல்லது 3 துளிகள்,
பால் - தேவையான அளவு,
 
செய்முறை...
 
* விதை நீக்கிய சீதாப்பழத்தை மிக்ஸியில் அரைத்து கூழாக்கி பால், தண்ணீர், எலுமிச்சம் பழம், சுகர், எல்லாத்தையும் கலந்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
* தேவையான போதெல்லாம் அப்படியே எடுத்துக் குடிக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கெடாமல் இருக்கும். இதை காலை நேரங்களில் குடிப்பது தான் சரியானது!

0 comments

மாங்காய் ஜுஸ்

|


மாங்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்..
 
மாங்காய் – 1
புதினா இலை - 6
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேன் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
 
செய்முறை......
 
• முதலில் மாங்காயை தோலை சீவி துண்டுகளாக நறுக்கவும்.
 
• மாங்காயுடன் புதினா, சிறிது நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததை நன்கு மசித்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு, சீரகத் தூள், மிளகுத் தூள், தேன் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவி பருகவும்.
 
• மாங்காய் ஒரு சிறந்த கிருமி நாசினி. மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொள்வது வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கிறது

0 comments

புதினா ஜுஸ்

|


புதினா ஜுஸ்

தேவையான பொருட்கள்:
 
புதினா – 1 கட்டு
எலுமிச்சம்பழம் – 1
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
 
 
செய்முறை:
 
• புதினா இலைகளை தண்ணீரில் சுத்தமாகக் கழுவி அரைத்துக் கொள்ளவும்.
 
• எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து எடுக்கவும்.
 
• அரைத்த புதினாவுடன், எலுமிச்சம் ஜுஸ், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து வடிகட்டிக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள்,  ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துக் கலக்கி பருகவும்.
 
பயன்கள்:
 
புதினா பித்தத்தை போக்கும். வயிற்றுக் கோளாறுகளை சரி செய்து பசியைத் தூண்டும். இரும்புச் சத்து உள்ளதால் இரத்த சோகையை நீக்கும்.

0 comments

அத்திப்பழம் ஜூஸ்

|


அத்திப்பழம் ஜூஸ்

தேவையான பொருட்கள்:
 
அத்திப்பழம் - கால் கிலோ
பனங்கற்கண்டு - 200 கிராம்
 குளுக்கோஸ் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
பால் அல்லது தண்ணீர்.
 
செய்முறை:
 
* மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் கலந்து மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும்  அத்திப்பழ ஜூஸ் ரெடி.

0 comments

நெல்லிக்காய் தயிர் பச்சடி

|


நெல்லிக்காய் தயிர் பச்சடி

தேவையானவை:
 
பெரிய நெல்லிக்காய் - 2,
தயிர் - அரை கப்,
பச்சை மிளகாய் - ஒன்று,
சீரகம் - கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை:
 
* நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும்.
 
* பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் துருவலை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 
* இதனுடன் நெல்லித் துருவல், அரைத்த விழுது, உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும்.
 
* எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்தால்... நெல்லிக்காய் தயிர் பச்சடி ரெடி.

0 comments
« Newer Posts Older Posts »
Blogger Widget
Scroll to top widget @Netoops Blog.blogspot.com

Popular Posts

Followers

Follow Me On TwitterFind Us On FacebookSubscribe to my feed நண்பருக்கு அறிமுகம் செய்ய

Blog Archive

  • Sept 2012 (1)
  • Apr 2012 (1)
  • Mar 2012 (2)
  • Feb 2012 (44)
இமெயில் மூலம் பெருக

Enter your email address:

Scroll to top widget @Netoops Blog.blogspot.com
Copyright © 2012.சமையல் குறிப்பு - All Rights Reserved.