சுவையான, காரசாரமான மட்டன் வறுவல் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
மட்டன் – 1 கிலோ
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1 /2 தேக்கரண்டி
கறி மசாலாத்தூள் – 1 /2 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
மல்லித்தழை – கையளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய்
வறுத்து அரைக்க
பட்டை – 2
கிராம்பு – 3
சோம்பு – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 1 கப்
பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
தேங்காய் – 1/2 கப்
செய்முறை
குக்கரில் நன்கு கழுவிய மட்டன் துண்டுகள், 1 /2 மேசைக்கரண்டி இஞ்சி,
பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறி மசாலா தூள்,
உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
பின் வேக வைத்த மட்டன் துண்டுகள்,
அரைத்த மசாலா விழுது, மிளகுத்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வறுவலில் உள்ள தண்ணீர் சுத்தமாக வற்றி, மட்டன் பிரவுன் கலராகும் வரை வதக்கி, மல்லிதழை தூவி பரிமாறவும்.
மட்டன் வறுவல் சாதம்,ரொட்டி அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.
|