சுவையான சாக்லேட் சிப் குக்கீஸ் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
மைதா மாவு – 1 1/4 கப்
முட்டை – 1
வெண்ணெய் – 1 ஸ்டிக்
பிரவுன் சர்க்கரை – 1/4 கப்
சர்க்கரை – 1/3 கப்
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
வென்னிலா எஸ்சென்ஸ் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
சாக்லேட் சிப்ஸ் – 6 அவுன்ஸ் பேக் / 1 கப்
செய்முறை
அவனை 375 டிகிரி வைத்து சூடு செய்யவும்.
வெண்ணையுடன் இரண்டு சர்க்கரையும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி மேலும் நன்கு அடித்துக் கொள்ளவும்.
இதனுடன் வென்னிலா எஸ்சென்ஸ் சேர்த்து மேலும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.
இதனுடன் மைதா மாவு, உப்பு மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை சிறிது சிறிதாக சேர்த்து மிருதுவாகும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
மைதா கலவையுடன் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பேக்கிங் சீட்டில் வெண்ணெய் தடவிக் கொண்டு, ஒவ்வொரு தேக்கரண்டி மாவு
எடுத்து பேக்கிங் சீட்டில் வைக்கவும்.
ஒவ்வொரு உருண்டைக்கும் இடையில் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
சூடு செய்யப்பட்ட அவனில் பேக்கிங் சீட்டை வைத்து 10௦ – 12 நிமிடங்கள் வரை அல்லது குக்கீ பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும்.
பின் குக்கீ சீட்டை வெளியே எடுத்து குளிர வைக்கவும்.
சூடு ஆறிய பின்பு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு மொறு மொறுப்பாக இருக்கும்.
குறிப்பு
சாக்லேட் சிப் குக்கீஸ் வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
|