skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு
  • கிங்Dom of கீழக்கரை

சமையல் குறிப்பு

பாலக் வெஜிடபிள் கிரேவி சாப்பிட ரெடியா?

|

Palak Vegetable Gravyபாலக் கீரையானது அதிக புரதச்சத்து நிறைந்தது. இதை தனியாக மசியல் செய்து உட்கொள்ளலாம். காய்கறிகளுடன் சேர்த்து கிரேவியாக செய்து சாதம், சப்பாத்தி போன்றவற்றிர்க்கு தொட்டுக்கொள்ளலாம். சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், முடக்குவாதம் நோய் உள்ளவர்களுக்கு நிவாரணம் தரக் கூடிய சத்தான உணவு இது.




தேவையான பொருட்கள்

பாலக்கீரை - 1/2 கட்டு
கேரட் - 1
பீன்ஸ் - 10
காலிஃப்ளவர் – 150 கிராம்
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 இன்ச்
மஷ்ரூம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன் ( வெந்தையக் கீரைப் பொடி)
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, மஷ்ரூம் முதலியவற்றை ஒரே அளவுள்ள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் அதில் சீரகம், பூண்டு, இஞ்சி, போட்டு வதக்கவும். பின் பச்சை மிளகாய், தக்காளி போட்டு நன்றாக கிரேவி பதம் வரை வதக்கவும். அதன் பின் காளான், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் முதலியவற்றைப் போட்டுக் கிளறவும். இதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி சேர்த்து வதக்க வேண்டும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள பாலக் கீரையை ஊற்றி கிளறவும். கடைசியாக தேவையான அளவு உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் சத்தம் வரும் வரை வேக விடவும். குக்கரைத் திறந்து கசூரி மேத்தியைப் போட்டு நெய் ஊற்றிக் கிளறி இறக்கவும். (கசூரி மேத்தி என்பது வெந்தயக் கீரையை காயவைத்து பொடி செய்யப்பட்டது)

இது வாசனையாகவும், சத்தாகவும் இருக்கும். கிரேவிக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். சத்தான காய்கறி பாலக் கிரேவி தயார். சூடாக சாதத்திற்கு பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற கிரேவி இது

0 comments
0 Responses

« Newer Post Older Post »
Blogger Widget
Scroll to top widget @Netoops Blog.blogspot.com

Popular Posts

  • சமையல்களில் பெரும் பங்காற்றும் - தக்காளி ரசம் ! - செய்முறை.
    தென்னிந்திய சமையல்களில் பெரும் பங்கு வைப்பது ரசம். ரசம் ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசம்  செய்யும்போது ரச பொடியை புதிதாக தயாரித்தா...
  • சுவையான சத்தான ஆட்டுக்கால் சூப்! - செய்முறை.
    சுவையான, சத்தான ஆட்டுக்கால் சூப் செய்வதற்கான எளிதான செய்முறை. தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 1 செட் (4 கால்) மிளகு - 2- 3 தேக...
  • ஹைதராபாத் சிக்கன் பிரியாணி! - செய்முறை!
    ஹைதராபாத் சிக்கன் பிரியாணி என்பது சிக்கன் மற்றும் பாஸ்மதி அரிசி சேர்த்து குறைந்த சூட்டில் தம் போடுவதாகும். எளிய முறையில் ஹைதராபாத் ச...
  • தக்காளி குருமா செய்வோமா?
    சுவையான தக்காளி குருமா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு திருமதி. ரேவதி சண்முகம் அவர்களின் செய்முறை குறிப்பை த...
  • தித்திக்கும் கேரட் அல்வா!
    காய்கறிகளின் ராணி என்று அழைக்கப்படும் அளவிற்கு பெருமை கொண்டது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும...
  • முட்டை கொத்து பரோட்டா!
    முட்டை கொத்து பரோட்டா! சுவையான முட்டை கொத்து பரோட்டா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. தேவையான பொருட்கள் பரோட்டா – 5 ம...
  • போண்டா செய்வது எப்படி?
    மைதா போண்டா செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு. தேவையான பொருட்கள் மைதா மாவு – 1  கப் இட்லி மாவு – 1 /2 கப் பெரிய வெங்காயம்...
  • கேரளா மீன் குழம்பு
    சுவையான கேரளா மீன் குழம்பு / மீன் கூட்டான் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. தேவையான பொருட்கள் சின்ன மீன் – 1/2 கிலோ (தலை,...
  • மசாலா தோசை - செய்முறை விளக்கம்.
    சுவையான மசாலா தோசை செய்வதற்கான சமையல் குறிப்பு.   தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 1 /2 கப் பச்சை அரிசி – 1 /2 கப் உளுத்தம்ப...
  • புளிப்பு மாதுளை சாதம்
    தேவையான பொருட்கள்.....   உதிரியாக வடித்த பச்சரிசி சாதம்  - 1 கப் புளிப்பு மாதுளம் பழம் - 2 பழம் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு ...

Followers

Follow Me On TwitterFind Us On FacebookSubscribe to my feed நண்பருக்கு அறிமுகம் செய்ய

Blog Archive

  • Sept 2012 (1)
  • Apr 2012 (1)
  • Mar 2012 (2)
  • Feb 2012 (44)
இமெயில் மூலம் பெருக

Enter your email address:

Scroll to top widget @Netoops Blog.blogspot.com
Copyright © 2012.சமையல் குறிப்பு - All Rights Reserved.