தேவையான பொருட்கள்
முட்டை – 4
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
தேங்காய் – 1 /4 கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
தனியாத்தூள் – 3 தேக்கரண்டி
பட்டை – 2
கிராம்பு – 2
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பாதி வெங்காயம், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட்டாக ஊற்றி, சதுர துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
தேங்காய், மிளகு,சீரகம் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இறக்கும் தருவாயில் வெட்டி வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்து இறக்கவும்.
விருப்பமெனில் சிறிது எலுமிச்சம்பழச்சாறு அல்லது ஒரு தேக்கரண்டி புளி விழுது சேர்த்துக் கொள்ளலாம்.
மல்லித்தழை சேர்த்து இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும்.
|