சங்காரா மீன் செந்நிறமுடையது. இது அதிக சுவை கொண்டது. குழம்பிற்கும், வறுவல் செய்யவும் ஏற்றது. மீனில் முள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு பதம் பார்த்து எடுத்து கொடுக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்
சங்கரா மீன் – 10
மிளகாய்தூள் - 2 டீ ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
கான்ப்ளவர் மாவு தேவை எனில் போடவும்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
மீன் கழுவும் முறை
முள் அதிகம் உள்ள மீன் சங்கரா. எனவே வெளிச்சத்தில்
கழுவவேண்டும்.
முதலில் இரண்டு புறமும் உள்ள முள்ளை வெட்டி எடுத்துவிட்டு செதில்களை வெட்டவேண்டும்.
தலைக்கு மேல் உள்ள ஓட்டினை பிடித்து வெட்டவேண்டும்.
பின்னர் வாலை பிடித்துக்கொண்டு உடலில் உள்ள செதில்
முழுவதையும் சீவி கழுவ வேண்டும்.
பின்னர் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.

வறுவல் செய்முறை
முதலில் மசாலா பவுடர்கள் அனைத்தையும்
ஒரு பாத்திரத்தில் கொட்டி கலவையாக செய்யவும்
அதில் இஞ்சிப்பூண்டு விழுது, எலுமிச்சம் பழத்தை
பிழிந்து விட்டு அந்த மசாலாவில் நன்றாக கலக்கவும்.
அந்த கலவையை கழுவி வைத்துள்ள சங்கரா மீன் மீது பூசி ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கொட்டி கலவையாக செய்யவும்
அதில் இஞ்சிப்பூண்டு விழுது, எலுமிச்சம் பழத்தை
பிழிந்து விட்டு அந்த மசாலாவில் நன்றாக கலக்கவும்.
அந்த கலவையை கழுவி வைத்துள்ள சங்கரா மீன் மீது பூசி ஊறவைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசா எண்ணெய் ஊற்றி
காய வைக்கவும். கல் காய்ந்த உடன்
அதில் ஐந்து மீன் துண்டுகளை வைத்து ஸ்டவ்வை மிதமான
தீயில் எரிய விடவும். இது எளிதாக வெந்து விடும்.
காய வைக்கவும். கல் காய்ந்த உடன்
அதில் ஐந்து மீன் துண்டுகளை வைத்து ஸ்டவ்வை மிதமான
தீயில் எரிய விடவும். இது எளிதாக வெந்து விடும்.
சுவையான சங்கரா மீன் வறுவல் தயார்.
Excellent information.. Very interesting post, thanks for sharing!